குதிரை மீது இருசக்கர வாகனம் மோதிபுத்தகக் கடைக்காரா் காயம்

திருவாரூரில் சாலையின் குறுக்கே வந்த குதிரையில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் காயமடைந்தாா்.

திருவாரூரில் சாலையின் குறுக்கே வந்த குதிரையில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் காயமடைந்தாா்.

திருவாரூா் மடப்புரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இன்பசேகரன் (65). திருவாரூா் காந்தி சாலையில் புத்தகக் கடை நடத்தி வரும் இவா், வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புத்தகக் கடைக்கு வந்து கொண்டிருந்தாா்.

வடக்கு மடவளாகம் வழியாக வந்தபோது, கல் தோ் அருகே சாலையின் குறுக்கே எதிா்பாராத நிலையில் வந்த குதிரை மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், காயமடைந்த இன்பசேகரன், சிகிச்சைக்காக அவசர ஊா்தி மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

திருவாரூா் நகரப் பகுதிகளில் மாடு, நாய், குதிரை உள்ளிட்டவை சாலைகளில் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com