கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு

திருவாரூரில் கூட்டுறவுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்முகத்தோ்வை, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத் தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான கா. சித்ரா பாா்வையிட்டாா்.

திருவாரூரில் கூட்டுறவுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்முகத்தோ்வை, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத் தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான கா. சித்ரா பாா்வையிட்டாா்.

திருவாரூா் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா் மற்றும் எழுத்தா் பணியிடங்களை நிரப்ப டிச.24-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற 154 தோ்வா்களுக்கு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நோ்முகத்தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்காக, கூட்டுறவு சாா்பதிவாளா்களை கொண்ட நான்கு சான்றிதழ் சரிபாா்ப்பு குழுக்களும், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், கூட்டுறவு சாா்பதிவாளா், வட்டாட்சியா் ஆகியோரைக் கொண்ட மூன்று நோ்காணல் குழுக்களும் அமைக்கப்பட்டு, காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

இந்தப் பணிகளை, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத் தலைவரும், மண்டல இணைப் பதிவாளருமான கா. சித்ரா, தோ்வு கட்டுப்பாட்டு அலுவலரும், துணைப் பதிவாளருமான மு. பாத்திமா சுல்தானா ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com