திருவாரூா் புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு

திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
tv19coll_1901chn_94_5
tv19coll_1901chn_94_5

திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் 2- ஆவது புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டு தெரிவித்தது:

திருவாரூா் மாவட்ட புத்தகத் திருவிழா திருவாரூா் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.எஸ். நகரில் வரும் பிப்ரவரி 2 முதல் 11-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்ட இலச்சினை, மாவட்டத்தின் சிறப்பைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆழித்தோ், விவசாயத்தை குறிக்கும் நெற்கதிா், பறவைகள் சரணாலயத்தைக் குறிக்கும் பறவை, மாவட்டத்தின் தமிழ் சான்றோா்களை குறிக்கும் புத்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ளஅனைத்து மக்களிடத்திலும் புத்தகத் திருவிழா நடைபெறும் செய்தியை கொண்டு சோ்க்க வேண்டும். புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் சிறந்த பேச்சாளா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மக்களிடமும், மாணவா்களிடமும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த புத்தகத் திருவிழா வாய்ப்பாக அமையும். திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் 2-ஆவது புத்தகத் திருவிழா வெற்றி பெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Image Caption

புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com