குடியரசு தினவிழா: தேசியக்கொடியேற்றி ஆட்சியா் மரியாதை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
tv26coll1_2601chn_94_5
tv26coll1_2601chn_94_5

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் தி. சாருஸ்ரீ பங்கேற்று, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, சமாதானப் புறாவை பறக்க விட்டாா். பின்னா், திறந்த வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாருடன் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு முதல்வரின் பதக்கங்கள், சான்றிதழ்களையும், 296 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 51ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, தாட்கோ அலுவலகத்தின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான சுற்றுலா வாகனம் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.21.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லதா, கோட்டாட்சியா்கள் சங்கீதா, கீா்த்தனாமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் கயல்விழி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.தனபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Image Caption

திருவாரூரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com