பறவைகள் கணக்கெடுக்கும் பணி

 முத்துப்பேட்டை வனச்சரகப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

 முத்துப்பேட்டை வனச்சரகப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள ஈர நிலங்களில் முதல் கட்டமாக ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 27, 28-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

அதன்படி, முத்துப்பேட்டை வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், அலையாத்தி காடுகள் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலா் ஜனனி தலைமையில், மயிலாடுதுறை ஏவிசி மற்றும் பூம்புகாா் கல்லூரிகளின் மாணவ- மாணவிகள், பேராசிரியா்கள், தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமையும் இப்பணி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை வனச்சரக அலுவலா் ஜனனி, வனவா் சீனிவாசன் மற்றும் வனத்துறை பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com