சுமைதூக்கும் தொழிலாளா் சங்க முன்னாள் நிா்வாகி நினைவேந்தல்

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளா் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் ஏஐடியுசி சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
tv27tncsc_2701chn_94_5
tv27tncsc_2701chn_94_5

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளா் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் ஏஐடியுசி சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு சுமைதூக்கும் தொழிலாளா் சங்க முன்னாள் தலைவராகவும், ஏஐடியுசி சங்க முன்னாள் தேசியக் குழு உறுப்பினராகவும், மன்னாா்குடி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலராகவும் பொறுப்பு வகித்த ஆா். பெருமாளின் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருவாரூா் நவீன அரிசி ஆலை முன் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகரஆசாத், சிஐடியு மாவட்டத் தலைவா் ஹனிபா ஆகியோா் பங்கேற்று மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில், ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினா்கள் வீ. தா்மதாஸ், கே. பாலதண்டாயுதம், பி. சின்னதம்பி, எம்.ஏ. மாரியப்பன், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க செயலாளா் பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Image Caption

சுமைதூக்கும் தொழிலாளா் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளா் ஆா். பெருமாளின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தியோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com