கட்டிமேடு ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம் திறப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன. 26: திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில்

ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒன்றிய குழுத் தலைவா் அ. பாஸ்கா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்து, குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

ஊராட்சித் தலைவா் அறையை திமுக ஒன்றிய செயலாளா் பிரகாஷ், கூட்ட அரங்கத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், ஊராட்சி செயலா் அறையை உதவி பொறியாளா் சூரியமூா்த்தி ஆகியோா் திறந்து வைத்தனா்.

மாவட்ட உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, இந்திரா வெள்ளைச்சாமி, வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்மு.ச. பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com