கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் குடியரசு தின விழா

திருவாரூா், ஜன. 26: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 75-ஆவது குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

குடவாசல் ஒன்றியம், சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் இந்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கண்ணன் தேசியக் கொடியை ஏற்றினாா். மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி, அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மாரிமுத்து ஆகியோா் மூவா்ணக் கொடியேற்றினா்.

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் கல்லூரிச் செயலா் பெரோஸ் ஷா தலைமை வகித்தாா். அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவிகளின் செயலா் எம். பகுமிதா ஷெரின் தேசியக்கொடி ஏற்றினாா்.

திருவாரூா் கௌரிசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகா்மன்ற உறுப்பினா் எஸ். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கலை இலக்கியப் பெருமன்ற செயலா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, ‘குடியரசும் குடிமக்கள் அதிகாரமும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன் தலைமையில், திருவாரூா் ரோட்டரி சங்கத் தலைவா் காா்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றினாா்.

திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், அலுவலக பெண் தூய்மைப் பணியாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில், ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com