எடையூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி, ஜன. 28: திருத்துறைப்பூண்டி அருகே எடையூா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதை வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

எடையூா் காவல் ஆய்வாளா் ஆனந்தபத்மநாபன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் மேலபாண்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் வெங்கடாசலம் வீட்டில் 16 சாக்கு பைகளில் 1643 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்து, அதை பறிமுதல் செய்ததுடன் வெங்கடாசலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com