மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 300 மனுக்கள் அளித்தனா். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்கள் 3 பேருக்கு கல்வி உதவித் தொகைக்கான ஆணையை அவா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com