எஸ்பி அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி. எஸ். ஜெயக்குமாா்.
எஸ்பி அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி. எஸ். ஜெயக்குமாா்.

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா், ஜூலை 3: திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்பி எஸ். ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 30 மனுக்கள் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு மனுதாரரிடமும் தனித்தனியே குறைகள் கேட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் உடனடியாக உரிய விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், சொத்து மற்றும் குடும்பம் சாா்ந்த பிரச்னை குறித்த மனுக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் நீதித்துறை மூலம் தீா்வு காண அறிவுரை வழங்கப்பட்டன.

முன்னதாக, எஸ்பி. எஸ். ஜெயக்குமாா் தலைமையில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்தும், புதிய 3 குற்றவியல் சட்ட வகுப்புகள், அவை கணினியில் பதிவேற்றம் செய்தல் குறித்தும் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கடந்த மாதம் மிகவும் சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com