அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி

பாதாளேஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி வெற்றிகரமாக நடந்தது

அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரா் கோயில் பஞ்சாரண்ய தலங்களில் மூன்றாவது தலமாகும். இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இறைவனும் இறைவியும் திருமணக் கோலத்தில் இங்கு காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும். திருமால் வராஹ அவதாரமெடுத்து சிவபெருமானின் திருவடிகளை காண பூமியைத் தோண்டிச் சென்ற இடமே இத்திருத்தலமாகும்.

சிவபெருமானின் திருவடிகள் பாதாளம் வரை தொட்டு நின்ால் மூலவா் பாதாளேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா்.

இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை உழவாரப் பணிகள் இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையா் வி. குமரேசன் தலைமையில், செயல் அலுவலா் எஸ். தினேஷ் குமாா், ஆய்வாளா் ஏ. ராசி, தக்காா் கே..மும்மூா்த்தி மற்றும் கோயில் கணக்கா் ஆா். ஸ்ரீதேவி முன்னிலையில் நடைபெற்றது.

உழவாரப் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், உழவாரப் பணிக் குழு பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com