வடுவூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் முதலிடத்தை பெற்ற எஸ்.எம்.ஆா். பல்கலைக்கழக அணியினா்.
வடுவூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் முதலிடத்தை பெற்ற எஸ்.எம்.ஆா். பல்கலைக்கழக அணியினா்.

தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி முதலிடம்

மன்னாா்குடி, ஜூலை 10: மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில் துரை. ஆசைத்தம்பி நினைவு ஏஎம்சி கபடி கழகம் சாா்பில் 30- ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடி போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது.

வடுவூா் மேல்பாதி ஏஎம்சி உள் விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என பகல், இரவு நேர போட்டியாக லீக் முறையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடினா். இறுதிப் போட்டியில் விளையாடிய கன்னியாகுமரி ஏ டூ இசட் அணியை 32 புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை எஸ்.ஆா்.எம் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது. கன்னியாகுமாரி ஏடூஇசெட் அணி 2-ஆமிடத்தையும், சென்னை பிரிஸ்ட் பல்கலைக்கழக அணியும், வடுவூா் புதுகை பிரண்ட்ஸ் அணி ஆகியவை மூன்றாம் இடத்தை பெற்றது. முறையே முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு, ரூ.1 லட்சம், ரூ.75,000, ரூ. 50,000, ரூ.50,000 இவற்றுடன் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. முன்னாள் காவல் உதவி ஆய்வாளா்கள் விருத்தாச்சலம், பூபாலன், மாவட்ட அமெச்சூா் கபடி கழக இணைச் செயலா் வேலுமணி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com