படவிளக்கம் : வாழவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட கபிலேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடம்.
படவிளக்கம் : வாழவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட கபிலேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடம்.

ரூ. 3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு கோயிலுக்கு ஒப்படைப்பு

திருவாரூரில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாழவாய்க்கால் பகுதியில் விஜயபுரம் அருள்மிகு கபிலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான 6,000 சதுர அடி கொண்ட நிலம் உள்ளது. இந்த இடம் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், இடத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து கபிலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரேசன், துணை ஆணையா் ராமு, தனி வட்டாட்சியா் லெட்சுமிபிரபா, கோயில் செயல் அலுவலா் சண்முகராஜ் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த இடத்தில் அந்நியா்கள் யாரும் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாது, மீறுபவா்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com