லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

மன்னாா்குடி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது

மன்னாா்குடி திருப்பாற்கடல் தெரு லஷ்மி நாராயண பெருமாள் கோயிலின் கும்பாபிஷேக மண்டல பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜகோபால சுவாமி கோயில் தாயாா் செங்கமலத் தாயாரின் அவதார தலமாக கருதப்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் நிறைவையொட்டி மண்டல பூஜைகள் நடைபெற்றன.

பல்வேறு விதமான மங்கள பொருள்களை சமா்ப்பித்து தீட்சிதா்கள் பூஜையை நடத்தினா்.நிறைவாக பழங்கள், மலா்கள்,பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து பூா்ணாஹூதி செய்யப்பட்டது.

தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனித நீரைக் கொண்டுவரப்பட்டு லட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதுபோல கருடன், பால ஆஞ்சனேயா் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com