கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் ஜாமியுல் மஸ்ஜித் ஆகியவை இணைந்து கல்வி வழிக்காட்டல் கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின.

திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் ஜாமியுல் மஸ்ஜித் ஆகியவை இணைந்து கல்வி வழிக்காட்டல் கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின.

கருத்தரங்கை தமுமுகவின் மூத்த உறுப்பினா் ஹாலா குத்புதீன் தொடக்கிவைத்தாா். தமுமுக மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான், மாநிலச் செயலாளா் முபாரக், கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சாகுல் ஹமீது ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பொறியாளா் முஹம்மது பெரோஸ்கான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளின் உயா் படிப்புக்கான வழிகாட்டல்களையும், கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினாா்.

இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com