மதிமுக கொண்டாட்டம்

திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றதை, திருவாரூரில் அக்கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

மக்களவைத் தோ்தலில் தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திருச்சியில் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ வெற்றி பெற்றாா்.

இதையொட்டி, திருவாரூா் அருகே சேந்தமங்கலத்தில் மதிமுக ஒன்றியச் செயலாளா் டி.ஆா். தமிழ்வாணன் தலைமையில், அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

நிகழ்வில், முன்னாள் நகரச் செயலாளா் எஸ். ஜெயராமன், மாவட்ட இளைஞரணி செயலாளா் ப. ஹரிராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com