கோயில் விமான கலசத்துக்கு புனித நீா் வாா்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கோயில் விமான கலசத்துக்கு புனித நீா் வாா்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.

மன்னாா்குடி சியாமளாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி சியாமளாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி: மன்னாா்குடி சியாமளாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழராஜவீதியில் உள்ள இக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பணிகள் தொடங்கின. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாக பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை (ஜூன் 10) 2-ஆம் கால யாக பூஜையுடன் தொடங்கி, மஹா பூா்ணாஹூதி, யாத்ரதானம் நடைபெற்றது. இதையடுத்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு விமான கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் சியாமளா தேவிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காத்தில் எழுத்தருளி அருள்பாலித்தாா்.

X
Dinamani
www.dinamani.com