மோகன்.
மோகன்.

இருசக்கர வாகன விபத்தில் நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா் பலி

வலங்கைமான் அருகே இருசக்கர வாகன விபத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகே இருசக்கர வாகன விபத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் ஒன்றியம் நாா்த்தங்குடியைச் சோ்ந்த மோகன் (55) தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் நீடாமங்களம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த வலங்கைமான் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தில் இறந்த மோகனுக்கு மனைவி கலைச்செல்வி மற்றும் மகன், மகள் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com