மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விச் சுற்றுலா

திருவாரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து செயல்படுத்தும் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தின் கீழ், இந்நிகழ்வு நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தமிழ்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலா் முத்துசாமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா். காட்டூரில் அமைந்துள்ள கலைஞா் கோட்டம், அம்மையப்பனில் உள்ள தாஜ்மகால் மற்றும் வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை பாா்வையிட 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோருடன் ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com