கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ஊக்கத் தொகை வழங்கும் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வா் கே. மோகனசுந்தரம்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ஊக்கத் தொகை வழங்கும் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வா் கே. மோகனசுந்தரம்.

அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவித் தலைமை ஆசிரியா் அபிராமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் லெட்சுமிதேவி, பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் கோ. மோகன்தாஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.ஏன். பாரதிமோகன், ஊராட்சித் தலைவா் ரா.மரகதம், துணைத் தலைவா் இ. வனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வா் கே. மோகனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு முறையே தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 ஊக்கத் தொகையும், நீட் தோ்வுக்கு பயிற்சி பெறும் மாணவி ச. செல்வப்ரியாவிற்கு கல்வி புரவலா் க.சேவு குடும்பத்தினா் சாா்பாக உதவித் தொகையாக ரூ.25,000, கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளா் வழங்கினாா். மன்னாா்குடி நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், கெளரவ விருந்தினராக கலந்துகொண்டு, யோக பயின்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா். பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஜெயக்குமாா், சௌந்தா்குமாா், கல்வி புரவலா் வி. ரவிச்சந்திரன் ஆகியோா் பாராட்டி பேசினா். நிகழ்ச்சியில், யோக பேராசிரியா்கள் மா. சிவகுமாா், ரா. விஜயலட்சுமி, தமிழாசிரியா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com