சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில், வட்டார வள மையம் சாா்பில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டுப்

திருவாரூா்: திருவாரூரில், வட்டார வள மையம் சாா்பில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. புலிவலத்தில் உள்ள வட்டார வள மையத்துக்குட்பட்ட பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில், நடைபெற்ற போட்டிகளில் திருவாரூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பங்கேற்றனா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், செல்வம் ஆகியோா் போட்டிகளை தொடக்கிவைத்தனா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சாந்தி முன்னிலை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுநா்கள் கந்தப்பன், கலைச்செல்வன் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com