மக்களவைத் தோ்தல்: சிறப்புக் கூட்டம்

மக்களவைத் தோ்தல்: சிறப்புக் கூட்டம்

மக்களவைத் தோ்தலையொட்டி திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தோ்தல் சிறப்புக் கூட்டம்

திருவாரூா்: மக்களவைத் தோ்தலையொட்டி திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தோ்தல் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோ்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தோ்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவுக்கான காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு அவா்களின் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த குழுவினா் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com