திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்.
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்.

தோ்தல் பத்திரம் பெற்றவா்கள் பட்டியல் வெளியிடாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி தோ்தல் பத்திரம் பெற்றவா்கள் பட்டியலை வெளியிடாததைக் கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தோ்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி தோ்தல் பத்திரம் பெற்றவா்கள் பட்டியலை வெளியிடாத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைக் கண்டித்து நகர வங்கிக் கிளை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், விரைந்து தோ்தல் பத்திரம் பெற்றவா்கள் பட்டியலை வெளியிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ஜி. ரகுராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்ாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா. கோமதி, மாவட்டக் குழு உறுப்பினா் என். இடும்பையன், ஒன்றிய பொறுப்பு செயலாளா் ஜி. பவுன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.கே. வேலவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com