திருவாரூரில் பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
திருவாரூரில் பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூா் தெற்கு வீதியில் உள்ள கௌரிசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சாா்பில் அனைத்து அரசு தொடக்க நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை தொடக்கி வைத்தாா். பேரணியில் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள், அரசு பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு என புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 மாத உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை குறித்து விளம்பர பதாகைகளுடன் மாணவா்கள் பங்கேற்றனா். இதில், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, நகராட்சி ஆணையா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com