மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

நீடாமங்கலத்தில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்க்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தொடக்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சம்பத், முத்தமிழன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) சத்யா, நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரிய சந்தானலட்சுமி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை உமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீா், அரசுப் பள்ளியில் சோ்ப்போம், கல்வி என்பது சமத்துவத்தை மலரச் செய்யும் ஆயுதம், காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரூ. 1,000 உதவித் தொகை, விலையில்லா பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com