ஆழித்தேரோட்டம்: 21-இல் உள்ளூா் விடுமுறை

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் மாா்ச் 21- ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்தி: திருவாரூா் மாவட்டத்தில், மாா்ச் 21 ஆம் தேதி தியாகராஜ சுவாமி திருக்கோயில் தோ்த்திருவிழா நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறைஅளிக்கப்படுகிறது. எனினும், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும் பாதுகாப்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும். அத்துடன், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தோ்வும் திட்டமிட்டபடி நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com