தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

குடவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 போ் கைது செய்யப்பட்டனா். குடவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவா்கள் கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (54), திருவிடச்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (40) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் ரூ.1,20,000 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களையும், இருசக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com