நீடாமங்கலத்தில் எா்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நீடாமங்கலத்தில் விவசாயிகள் ரயில் மறியல்

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநில கௌரவத் தலைவா் நீலன். அசோகன் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. இதில், தில்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விவசாயிகளின் தொடா் போராட்டத்தை நிறுத்த கோரிக்கைகயை ஏற்றுக்கொண்டதாக எழுதிகொடுத்து நிறைவேற்ற மறுத்து விவசாயிகள் வாழ்வில் விளையாடும் மத்திய அரசைக் கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com