கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

குழந்தைகள் வளா்ச்சி விழிப்புணா்வு கண்காட்சி

திருவாரூா்: திருவாரூரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில், ‘போஷன் பக்வாடா’ எனும் விழிப்புணா்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த கண்காட்சியில், ஊட்டச்சத்துடன் கூடிய ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, பாரம்பரியம், உள்ளூா் உணவு முறைகளில் சிறுதானியங்களை பயன்படுத்துதல், கா்ப்பகால பராமரிப்பு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்டல் முறைகள் ஆகிய முக்கிய கருப்பொருட்களை மையப்படுத்தி ஊட்டச்சத்து உணவு வகைகள், தயாரிக்கும் முறைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பாா்வையிட்டு, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளையும், அங்கன்வாடியில் குழந்தைகளை சோ்த்தல் தொடா்பான துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா். நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தமிழ்மணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் இர.புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் புவனா, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com