திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா்.
திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா்.

ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பி.வி. ரமேஷ் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் ஆா். வாசுதேவன், சிபிஐ நகரச் செயலாளா் டி.பி. சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசு, ஆட்டோ செயலியை உடனடியாக தொடங்க வேண்டும்; தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளனத்தின் 2-ஆவது மாநில மாநாட்டு தீா்மானங்களை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்; ஆட்டோ மற்றும் மோட்டாா் தொழிலாளா்களுக்கு வரி இல்லாமல் மானிய விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டும்.

பண்டிகை காலங்களில் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்; 60 வயது பூா்த்தியடைந்த தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com