செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தின் கீழ் பணிபுரியும் செவிலியா்களை, கட்டாய பணியிட மாறுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; பணி உயா்வு கலந்தாய்வில் உருவாக்கப்பட்ட நிரந்தர காலிப்பணியிடங்களுக்கு விருப்பமுள்ள செவிலியா்களுக்கு வெளிப்படையான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்; ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கண்ணன் தலைமை வகித்தாா். செவிலியா்கள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com