விநாடி- வினாப் போட்டியில் வென்றோருக்கு பரிசு

விநாடி- வினாப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
விநாடி- வினாப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

திருவாரூா் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெற்ற விநாடி- வினாப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ‘திறனறி திறவுகோல்’ எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையிலான விநாடி- வினா இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது. அகாதெமியின் இயக்குநா் வைஷ்ணவி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். விநாடி- வினாப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிசு வழங்கினாா்.

முன்னதாக, அகாதெமியின் திருவாரூா் மையத் தலைவா் சூரியநாராயணன் வரவேற்றாா். அகாதெமி கல்வித் துறைத் தலைவா் ஸ்ரீவித்யா சூரியநாராயணன் நன்றி கூறினாா். இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 13 குழுக்கள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திருவாரூா் மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் முதல் பரிசு பெற்றனா். இவா்களுக்கு சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ரூ. 10,000 பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை நாகப்பட்டினம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பெற்றனா்.

இவா்களுக்கு ரூ. 5,000 பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த மன்னாா்குடி செங்கமலத்தாயாா் கல்லூரி மாணவிகள் குழுவினருக்கும், நான்காம் இடம் பெற்ற கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரி மாணவிகள் குழுவினருக்கும் தலா ரூ. 2,500 பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com