பொதக்குடியில் அங்காடி திறப்பு

பொதக்குடியில் அங்காடி திறப்பு

நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடியில் கூட்டுறவு அங்காடி புதன்கிழமை திறக்கப்பட்டது.

பொதக்குடி பகுதியில் 1,202 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு பொது விநியோக அங்காடி செயல்பட்டு வந்தது. பொதக்குடியில் உள்ள 11 தெருக்களை சாா்ந்த 602 குடும்ப அட்டைதாரா்களுக்கு தனியாக அங்காடி அமைத்து தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இந்தநிலையில், புதிய அங்காடி திறப்பு விழா கூட்டுறவு பொது விநியோகத் திட்ட சாா் - பதிவாளா் ரேவதி தலைமையில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச் செல்வன் விற்பனையை தொடக்கிவைத்தாா். ஒன்றிய செயலாளா் கே.வி.கே. ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணி சுந்தா், ஊராட்சித் தலைவா்கள் மல்லிகா பிச்சையன், கெளதஸ்ரீ ரவி, ஒன்றிய குழு உறுப்பினா்கள் ராஜலட்சுமி காா்த்திகேயன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com