திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளா்கள்.
திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளா்கள்.

ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரேஷன் கடைகளுக்கு பொட்டலமாக பொருள்களை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும், வீடுவீடாகச் சென்று கைரேகை பெறுவதையும், விடுமுறை நாள்களில் பணி கைரேகை பதிவு செய்ய வலியுறுத்துவதையும் கைவிட வேண்டும், பணியில் இருக்கும்போது உயிரிழந்த பணி வரன்முறைப்படுத்தாத பணியாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறை அமைக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளா் பி. முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் வி. ஹரிஹரன், மாவட்டத் தலைவா் ரா. குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com