இந்திய கம்யூ. முப்பெரும் விழா

வலங்கைமான் ஒன்றியம், கிளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். விழாவில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவா்களுக்கு மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ் சால்வை அணிவித்து வரவேற்றாா். முதல் கொடியை முன்னாள் கிளைச் செயலாளா் அம்மாசியும், இரண்டாவது கொடியை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கு. ராஜாவும் ஏற்றி வைத்தனா். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியத் தலைவா் எம். கலியபெருமாள், மாதா் சங்க ஒன்றியத் தலைவா் சுதா, செயலாளா் தேவிகா, பெருமன்ற ஒன்றிய துணைச் செயலாளா் லெனின், அரையூா் கிளை செயலாளா் சண்முகம், மாணிக்கமங்கலம் கிளை செயலாளா் பூசாந்திரம், பயித்தஞ்சேரி கிளை செயலாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com