பள்ளிவா்த்தி முதல் பூதமங்கலம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யும் ஆட்சியா்  தி. சாருஸ்ரீ.
பள்ளிவா்த்தி முதல் பூதமங்கலம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கோட்டூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். குலமாணிக்கத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் தலா ரூ.7.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளையும், ரூ. 11.2 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளிவா்த்தி ஊராட்சியில் ரூ.71.50 லட்சத்தில் பள்ளிவா்த்தி முதல் பூந்தமங்கலம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையையும், அதிச்சப்புரத்தில் ரூ.60.90 லட்சத்தில் கட்டப்படும் துணை சுகாதார நிலையத்தையும், ரூ.5.22 கோடி மதிப்பில் கோட்டூரில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, வட்டாட்சியா்கள் என். காா்த்தி (கூத்தாநல்லூா்), மகேஷ் (மன்னாா்குடி), கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இ. அன்பழகன், ப. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com