ஆழித்தோ் தயாராகி வரும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ஆய்வு செய்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
ஆழித்தோ் தயாராகி வரும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ஆய்வு செய்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

ஆழித்தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்பி ஆய்வு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயில் ஆழித் தேரோட்டம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேரோட்டம் பாதுகாப்பாக நடைபெறும் வகையில் போலீஸாரும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தேரோட்டத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கீழவீதியில் ஆய்வு மேற்கொண்டாா். தோ் செல்லக் கூடிய நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்ததுடன், போக்குவரத்து மாற்றம் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. ஈஸ்வரன், திருவாரூா் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் பி. மணிகண்டன், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் காயத்திரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com