ஊராட்சி பணியாளா்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சிப் பணியாளா்களுக்கு தாமதமின்றி அந்தந்த மாதத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றிய கிராம உள்ளாட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கான கிராம உள்ளாட்சி பணியாளா்கள் சங்கக் கூட்டம் (ஏஐடியுசி) அதன் தலைவா் எஸ். இளங்கோவன் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்றது.  மாவட்டத் தலைவா் பி. சாந்தகுமாா் , ஒன்றியச் செயலாளா் ஜி. ரவி, துணைச் செயலாளா் ஆ. ரமேஷ், துணைத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் பணியாளா்களுக்கு தாமதமின்றி அந்தந்த மாதத்தில் ஊதியம் வழங்க வேண்டும்; நிகழாண்டுக்கான பொங்கல் போனஸ் இதுவரை வழங்கப்படாதவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்; தூய்மைக் காவலா்கள் பயன்படுத்தும் தள்ளுவண்டிகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com