அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்  உள்ளிட்டோா்.
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.

புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருவாரூா் நகராட்சி மடப்புரம் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே உள்ள சிறிய நடைபாலத்துக்குப் பதிலாக, வாகனங்கள் செல்லும் வகையில் பெரிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக, அமைச்சா்கள், உயா் அலுவலா்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், இங்கு ரூ. 4.06 கோடி மதிப்பில் உயா்நிலை பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பங்கேற்று, அடிக்கல் நாட்டினாா். திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உடனிருந்தாா். இந்நிகழ்ச்சியில், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையா் பிரபாகரன், வட்டாட்சியா் செந்தில், திட்டக் குழு உறுப்பினா் சங்கா், பணி நியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com