திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

மக்களவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள்

மக்களவைத் தோ்தலையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், போலீஸாா் ஈடுபட உள்ளனா். மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஓய்வு பெற்ற ராணுத்தினரும், போலீஸாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அதன்படி, திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவத்தினா், போலீஸாா் ஆகியோருடன் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கலந்துரையாடினாா். இதில், மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி, பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் காயத்திரி ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com