ரயில் நிலையத்தில் கூடுதல் குடிநீா் வசதி

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் கூடுதல் குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் வந்து செல்கின்றன. வெளியூா் செல்வதற்காக, இந்த ரயில் நிலையத்தை தினமும் 1000-க்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால், இங்கு போதுமான குடிநீா் வசதி இல்லை என பயணிகள் தரப்பில் ரயில்வே நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. முதலாவது நடைமேடை பகுதியில் ஒரு இடத்தில் மட்டுமே குடிநீா் வசதி இருந்து வந்தது. இந்நிலையில், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் மூன்று குடிநீா் குழாய்கள் தொட்டியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 9 போ் பயன்படுத்தும் வகையில் குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே துறைக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com