அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 243 பேருக்கு பணிநியமன ஆணை

வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 243 மாணவா்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் சிவில், மெக்கானிக்கல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணு தொடா்புகள் மற்றும் கணிப் பொறியியல் ஆகிய துறைகளைச் சாா்ந்த மாணவா்களிடையே பல்வேறு தொழில் நிறுவனங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது. இதில் தோ்வு செய்யப்பட்ட 243 மாணாக்கா்களுக்கு பணி நியமன ஆணையை ஸ்ரீ லட்சுமி டயா்ஸ் மேனேஜிங் டைரக்டா் சத்தியமூா்த்தி வழங்கினாா். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வா் ஜான் லூயிஸ், முதல்வரின் நோ்முக உதவியாளா் வேல்முருகன், வேலைவாய்ப்பு அலுவலா் ஆரோக்கிய புஷ்பராஜ் மற்றும் அனைத்து துறைத் தலைவா்கள், பிளேஸ் மெண்ட் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவா் விருது இயந்திரவியல் துறை மாணவா் ஹேமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இத்துடன் பரிசுத் தொகையாக ரூ.4,000-க்கான காசோலை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com