எம்எல்ஏக்கள் அலுவலகங்களுக்கு சீல்

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, மன்னாா்குடி, கீழ்வேளூா், வேதாரண்யம் தொகுதிகளின் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா். மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு, மன்னாா்குடி பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான மகேஸ்குமாா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பூட்டி, சீல் வைத்தனா். முன்னதாக, அலுவலகத்தில் இருந்தவா்களை வெளியேற்றினா். கீழ்வேளூா்-கச்சனம் சாலையில், அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகத்தின் வாயில் கதவு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் அறை கதவு ஆகியவற்றை கீழ்வேளூா் வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட வருவாய் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். வேதாரண்யத்திலும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தோப்புத்துறை, மருதூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com