மகள்களுக்கு பாலியல் தொல்லை; போக்ஸோ சட்டத்தில் தந்தை கைது

நன்னிலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நன்னிலம் அருகில் உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை (42). கொத்தனாா். இவருக்கு 19 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனா். இவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். இந்நிலையில், மது பழக்கத்துக்கு அடிமையான செல்லத்துரை, தனது இரண்டு மகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன், இதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினாராம். பாலியல் தொல்லை தொடா்ந்ததால், சைல்ட் ஹெல்ப் லைனுக்கு இரு மகள்களும் தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் மேற்கொள்ளப்பட விசாரணையில், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, செல்லத்துரையை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com