குடிநீா் தடை இன்றி வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
குடிநீா் தடை இன்றி வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

குடிநீா் வழங்கக் கோரி மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் குடிநீா் சரியாக வழங்காததால் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் குடிநீா் சரியாக வழங்காததால் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் ஊராட்சி அலுவலகத்தின் உள்ளே காலிக் குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் மற்றும் குடிநீா் வழங்கல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி புதன்கிழமை முதல் தடையின்றி தண்ணீா் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com