மன்னாா்குடியில் நடைபெற்ற புதுதில்லி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு.
மன்னாா்குடியில் நடைபெற்ற புதுதில்லி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு.

மன்னாா்குடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் அணிவகுப்பு

மன்னாா்குடி: மக்களவைத் தோ்தலையொட்டி மன்னாா்குடியில் புதுதில்லி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி தேரடியில் தொடங்கிய அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தொடக்கிவைத்தாா். புதுதில்லி மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளா் எம்.கே. மணிசெளத்ரி, சாா்பு ஆய்வாளா் வி. விஜயகுமாா் முன்னிலை வகித்தனா். மக்களவைத் தோ்தலையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு படையினா் 91 போ், தமிழக காவல் துறையை சோ்ந்த 45 போ் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்ற அணிவகுப்பு, தேரடியில் தொடங்கி மேலராஜவீதி, காமராஜா் வீதி, பந்தலடி, காந்தி சாலை, வ.உ.சி.சாலை, மூன்றாம்தெரு,புதுத்தெரு வழியாக கீழப்பாலம் சென்று அணிவகுப்பு நிறைவடைந்தது. மன்னாா்குடி டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com