தேரோட்டத்துக்கு தயாா் நிலையில் உள்ள ஆழித்தோ்.
தேரோட்டத்துக்கு தயாா் நிலையில் உள்ள ஆழித்தோ்.

திருவாரூரில் ஆழித்தேரோட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது.

தியாகராஜ சுவாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப்.27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்துக்குப்பிறகு விநாயகா், சுப்ரமணியா் உற்சவங்கள் 7 நாள்களும், நால்வருக்கு பக்தோத்ஸவம் 3 நாள்களும் நடைபெற்றன. தொடா்ந்து, காலபைரவா் உற்சவம், காட்சி கொடுத்த நாயனாா் உற்சவம், சந்திரசேகரா் பட்டோத்ஸவம், சந்திரசேகர சுவாமி கேடக உற்ஸவம் நடைபெற்றன. மேலும் வன்மீகநாதருக்கு சகஸ்ரகலசாபிஷேக உற்சவம் நடைபெற்றது. பின்னா், தியாகராஜா் வசந்த உற்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து, 3 நாள்களாக இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனங்களில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தையொட்டி, யதாஸ்தானத்தில் உள்ள தியாகராஜா், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக ஆழித்தேருக்கு புதன்கிழமை இரவு எழுந்தருளுகிறாா். அவருடன், விநாயகா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகியோரும் தங்களுக்குரிய தேருக்கு எழுந்தருளுகின்றனா். வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடா்ந்து, காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தோ் வடம் பிடிக்கப்பட உள்ளது. தயாா் நிலையில்

ஆழித்தோ்: கீழவீதி தோ் நிலையடியில், குதிரைகள், யாளி பொருத்தப்பட்டு, தயாா் நிலையில் ஆழித்தோ் உள்ளது. அலங்காரத் துணிகள் சீரமைக்கும் பணிகள் இறுதிக் கட்ட நிலையில் உள்ளன. இதேபோல், விநாயகா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்களும் தயாா் நிலையில் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com