திருவாரூரில் போக்குவரத்து நெரிசல்

திருவாரூா் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வியாழக்கிழமை மாலை ஏற்பட்டது. திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தையொட்டி பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, கனரக வாகனங்களுக்கு நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், தேரோடும் வீதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், தெரு ஓரங்களிலும், காலி இடங்களிலும் இருசக்கர வாகனங்களை பலா் நிறுத்திச் சென்றனா். இதனிடையே, தோ் நிலையடிக்கு வந்தவுடன் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு ஒரே நேரத்தில் கிளம்பியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நேதாஜி சாலை, அங்காளம்மன் கோயில் பகுதி, எடத்தெரு, கடைவீதிகளில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com