மன்னாா்குடியில் திடீா் மழை

மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். நிகழாண்டு வழக்கத்தைக் காட்டிலும் கோடை வெயில் அதிகரித்து, வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், மன்னாா்குடி மற்றும் சுற்றுப் பகுதியில் சில இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை அவ்வப்போது லேசான மற்றும் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது. பின்னா் மதியம் வழங்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

முத்துப்பேட்டை பகுதியில் சில நாள்களாக வழக்கத்தை விட வெயில் வானிலை அதிகரித்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தென்னை விவசாயிகளும், உளுந்து, பயறு சாகுபடி செய்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com